கேள்வி: கிறிஸ்தவ ஊழியங்கள், கிறிஸ்தவ ஊழியர்கள் இன்றைக்கு அதிகம். ஆனால் இரட்சிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. இதற்கு காரணம் என்ன?
பதில்: கிறிஸ்தவ ஊழியர்கள் வசதியான வாழ்வை தேடி நகர் புறங்களில் வாழ்வதால் பணித்தலங்களில் ஊழியர்கள் குறைவு. மக்களின் இரட்சிப்பும் குறைவு.
(யோனா-4:10,11.) "அதற்குக் கர்த்தர்: நீ பிரயாசப்படாததும், நீ வளர்க்காததும், ஒரு இராத்திரியிலே முளைத்ததும், ஒரு இராத்திரியிலே அழிந்து போனதுமான ஆமணக்குக்காகப் பரிதபிக்கிறாயே.
வலதுகைக்கும் இடதுகைக்கும் வித்தியாசம் அறியாத இலட்சத்து இருபதினாயிரம்பேருக்கு அதிகமான மனுஷரும் அநேக மிருகஜீவன்களும் இருக்கிற மகா நகரமாகிய நினிவேக்காக நான் பரிதபியாமலிருப்பேனோ என்றார்."
இந்த வார்த்தை யோனாவிற்கு மட்டுமல்ல அனைத்து கிறிஸ்தவ ஊழியர்களுக்கும் இது பொருந்தும்.
நகர் புறங்களில் ஒவ்வொரு தெருவிலும் ஒவ்வொரு திருச்சபை காணப்படுகிறது. ஆனால் ஆதிவாசி மக்கள் வசிக்கும் பகுதியில் ஒரு திருச்சபை கூட இல்லை. காரணம் அர்பணிப்பு இன்றைய ஊழியர்களிடம் இல்லை. அன்று ராபர்ட் கார்ல்டுவெல், வில்லியம் கேரி, சீகன் பாலக், ரேனியஸ், கிரகாம் ஸ்டேன்ஸ், ... இவர்கள் மீட்பரின் மீட்பை அர்பணிப்போடு எடுத்துரைத்தார்கள். அவர்களின் அர்பணிப்பான வாழக்கை தான் இன்று நம்மை நாகரீகமுள்ள மனிதர்களாக மாற்றியுள்ளது. இதை ஊழியர்கள் உணர்ந்தால் போதும், மக்கள் அனைவரும் பாவ வாழ்க்கையில் இருந்து மீட்பை பெறுவார்.